full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அரசியலில் குதிக்கும் உதயநிதி

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் `பொதுவாக எம்மனசுல தங்கம்’. தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் உதயநிதி கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபனும், உதயநிதி நண்பனாக சூரியும் நடித்திருக்கின்றனர். மேலும் மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர், ரமா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக திருவிழா செட்டுடன் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் டிரைலரை பார்க்கும் போது படம் கண்டிப்பாக உதயநிதி – சூரி கூட்டணியின் கலக்கல் காமெடியுடன், பார்த்திபனின் நக்கல், காமெடி, வில்லத்தனம் கலந்த அரசியல் சாயத்துடன், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும், கிராமத்து படமாக இருக்கும் என்று தெரிகிறது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் உதயநிதி, பார்த்திபனுக்கு எதிராக அரசியல் களத்தில் குதிக்கும் இளைஞனாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.