full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரெட் கார்டு வாங்காமல் தப்புவாரா வடிவேல்?

வடிவேலு கொடுத்த குடைச்சலால் பாதியில் நின்ற இம்சை அரசன் பார்ட் 2 வின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் வடிவேலு இறங்கி வந்து இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது.

இதனை இம்சை அரசன் படக்குழு மறுத்துள்ளது. வடிவேலு இன்னும் பிடிவாதம் பிடித்தே வருகிறார். பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்று இருக்கிறது.

சங்க நிர்வாகிகளுக்கும் வடிவேலு சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வடிவேலு நடிக்க தடை என்று ரெட்கார்டு போடப்படுவது உறுதி. ஏற்கனவே வடிவேலு நடிப்பதாக இருந்த படங்களில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டு விட்டார்’ என்று கூறுகிறது படக்குழு.

வடிவேலு மீது ரெட்கார்டு போடப்பட்டால் அவரது சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவிக்கின்றனர் சினிமா ரசிகர்கள்.