full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

திரைப்படம் தயாரிக்கிறார் வைகோ

வேலுநாச்சியார் மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகபிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.வேலுநாச்சியார் வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் என்றார் வைகோ.

அவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய விஷால், “வைகோ அவர்கள் வேலுநாச்சியார் திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னை வேலுநாச்சியார் மேடை நாடகத்தைப் பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்தார். எனக்கு அரசோடு முக்கியமான சந்திப்பு இருந்தது. சில விஷயத்தை சில நேரத்தில் தவிர்க்க வேண்டியிருக்கும்.

முதலில் இந்த நாடகத்தை இயக்கிய இயக்குனருக்கும், இந்த நாடகத்தில் வேலுநாச்சியார், பெரிய மருது, சின்ன மருது கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் நடித்த நடிப்பு, தங்களுடைய கடுமையான உழைப்பு அனைத்துக்கும் பாராட்டுக்கள். இங்கே நமது திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இருப்பார்கள்.

பிரிட்டிஷ் அரசருக்கு வரிகட்டுவதை எதிர்த்து வேலுநாச்சியார் போராடினார். தமிழக அரசிடம் கேளிக்கை வரியை ரத்து செய்ய வைப்பது எப்படி என்று நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம். நிச்சயம் ஒரு நல்ல தீர்வு எங்களுக்கு கிடைக்கும். ஒரு பாதுகாப்பான பாதை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்த வேலுநாச்சியார் என்ற கதாபாத்திரத்துக்கும், என்னை ஊக்குவித்த வேலுநாச்சியார் கதாபாத்திரத்துக்கும் நன்றி. அதே போல் நான் கத்தியால் சண்டை போட போவதில்லை , புத்தியால் தான் சண்டை போட போகிறேன். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

எனக்கு வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்த்தது ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்தது. இந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்கப் போகிற வைகோ அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.

அவரைத் தொடர்ந்து பேசிய வைகோ, “தமிழர்களின் உயிர்க்காவியமான இமயமலை முதல் அலைகள் பொங்கி விளையாடும் கன்னியாகுமரி முனை வரை இந்த உபநிடத்திலே ஆதவன் அஸ்த்தமைக்காத எங்களை பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் கட்டளை புரிந்து கொண்டிருந்த ஏகாதிபத்தியத்தை முதலில் வெற்றி கொண்டவர் வேலுநாச்சியார். நான் ஜான்ஸி இராணியை மதிக்கிறேன்.

காந்தியத்தை, நானாசாகிப்பை மதிக்கிறேன் அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன். ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகங்கை அரசி அனைவரும் ஒன்று சேர்த்து வெற்றி பெற்ற வரலாற்றை, திருவள்ளுவரின் படத்தைத் தீட்டிய வேணுகோபால்சர்மா அவர்களின் மகன் ஸ்ரீராம் சர்மா அவர்கள் ஆறரை ஆண்டுக்கு முன்னால் சந்தித்து பேசிய போது மெய் மறந்து போனேன்.

இந்த நாட்டிய நாடகத்தில் நீங்கள் வேலுநாச்சியாரை கண்டீர்கள். உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக நடிகர் திலகம் நமக்கு எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனாக காட்சி அளித்தாரோ அதைப் போல சகோதரி மணிமேகலை சர்மா வேலுநாச்சியாராகவே இங்கு காட்சி அளித்தார். இந்த காவியத்தை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டுவதற்கான காரணம் இங்கே ஹைதரலியும் வேலுநாச்சியாரைச் சந்திக்கின்ற காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. மரவர் சீமையில் மகாராணிக்கு வந்தனன் என்று புரியட்டும் என்னை தமைக்கையாக ஏற்று கொண்ட பாதுசாவுக்கு அவர்கள் நன்றி கூறியது. படைபலத்தைக் கேட்டதும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை நிலை நாட்டுகின்ற ஒரு உணர்வு தமிழ் நாட்டுக்கு தேவை என்பதை நான் இங்கு நினைவுட்டுகிறேன். வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு அதை கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதில் பெருமைபடுகிறேன்.” என்றார்.