“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் “உரு” மற்றும் “எழுமின்” படத்தைத் தொடர்ந்து மூன்றாவது படமாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் V.P. விஜி தயாரித்து இயக்கும் மிக பிரம்மாண்டமான திரைப்படம் தயாராகிறது .
சமீத்தில் தாய்லாந்து குகைக்குள் சாகச பயணம் மேற்கொண்ட சிறுவர்கள் மழை நீரில் மாட்டிக் கொண்டதும், அவர்களை மீட்க 17 நாட்கள் மீட்புக் குழுவினர் போராடியதும் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுவர்களின் சாகச பயணத்தின் போது எதிர்பாராமல் வரும் பெருமழையும், அவர்களை மீட்க மீட்புக் குழு உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் உணர்ச்சிமிகு போராட்டமும் கலந்து ஆங்கிலப் படங்களுக்கு நிகரான தொழிற்நுட்ப நேர்த்தியோடு உருவாக இருக்கிறது இத்திரைப்படம்.
இக்கதையில் இடம்பெறுகிற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரை உலகின் முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக படப்பிடிப்பை நிறைவு செய்து அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.