கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் வரலட்சுமி, இயக்குநர் பேரரசு.

News

வாக்ஸ் குழும நிறுவனர் அமரர் சோ ஞானசுந்தரம் அவர்களின் நினைவு நாளையொட்டி வாக்ஸ் அறக்கட்டளை சார்பாக 800 ஏழை எளிய மாணவர்களுக்கு 50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர்-தலைவர் மக்கள் நல பாதுகாவலர் ஆ.ஹென்றி தலைமை ஏற்றார். கல்வி கொடை வள்ளல் வாக்ஸ் குழுமம் சேர்மேன் ஞா.இராவணன் அவர்கள் கல்வி உதவியை வழங்கினார்.

மேலும் இந்த விழாவில் குழுத் தலைவர் இராவணன் பேசுகையில் அடுத்த வருடம் முதல் 1000-ம் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இதுவரை இந்த விழாவின் மூலமாக 5500 க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பதையும் மகழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறிய அவர், 80% அதிகமான மதிப்பெண்கள் பெற்று பொருளாதார ரீதீயாக வறுமையில் வாடும் மாணவ மணிகளும், கணவனால் கை விடப்பட்ட பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோர்களும் விண்ணப்பிக்கலாம். எங்களது விண்ணப்பங்கள் www.voxgroup.com\foundation மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.