full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

புது யுக்தியைக் கையாண்ட நடிகை வரலட்சுமி!

இன்று காலை முதல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி கடத்தப்பட்டதாக படங்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் பதட்டத்தை உண்டாக்கியது.

இதையடுத்து, நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் கணக்கில், தான் கடத்தப்பட்டதாக வெளியான புகைப்படம், தனது அடுத்த பட புரோமசன்கான புதிய யுக்தி.” என்றும், மற்ற விவரங்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.