full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வரிசையாய் வரும் வாரிசுகள்!

அரசியலில் தான் வாரிகளின் ஆதிக்கம் என்றால், சினிமாத்துறை அதற்கு மேல்.. இங்கு கோலோச்சுகிற பாதிக்கு மேற்பட்டோர்
வாரிசுகளாகத் தான் இருக்கிறார்கள்.

அந்த வகையில், அடுத்த தலைமுறை நடிகர்களை கோலிவுட் உருவாக்க ஆரம்பித்திருக்கிறது போல. வரிசையாக வாரிசுகள் அறிமுகமாக தொடங்கியிருக்கிறார்கள் சமீபத்தில்.
ஏற்கனவே நடிகர் விக்ரமின் மகன் துருவ், பால இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி “டிக் டிக் டிக்” படத்தில் அவருக்கு மகனாகவே அறிமுகமாகிறார்.

இவர்களின் வரிசையில் தற்போது, காமெடி நடிகர் சூரியின் மகன் சர்வான் இணைந்திருக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் “ஏஞலினா” படத்தில் சர்வான் நடித்திருக்கிறார்.
இந்த தகவலை சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், “வெண்ணிலா கபடி குழு” படத்தில் சூரியை அறிமுகப்படுத்தியது போலவே இப்போது சூரியின் மகனை அறிமுகப்படுத்துவதற்கும் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.