பரபரப்பாக #சர்தார் படப்பிடிப்பு. நடிகர் கார்த்தி மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

cinema news
 
தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு  கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையெய் தொடர்ந்து கொடைக்கானல் காட்டுப்பகுதிகளிலும், மைசூர் காட்டுப்பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதில், ஸ்டண்ட் காட்சிகளை பிரமாண்ட அளவில் எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார்.
Sardar First Look – Karthi and PS Mithran joins for the first time!
பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை கவரும்  மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் #சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமடைந்துள்ளது. ‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான  கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், படம் முடிவடையும் முன்னதாகவே  படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.இரு வேடங்களில் கார்த்தி நடிக்கிறார்.கார்த்தி ஜோடியாக  ராஷிகண்ணா நடிக்கிறார். சிம்ரன் ஜங்கி ஃபாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கியபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்   S.லக்ஷ்மன்குமார் “சர்தார்” படத்தை   பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். 
 
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.  
ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ், 
எடிட்டிங் – ரூபன், 
கலை இயக்கம் – கதிர், 
எழுத்து – எம்.ஆர்.பொன்பார்த்திபன், ரோஜி, பிபின்ரகு.
ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன், 
ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா D, 
பாடல்கள் – யுகபாரதி, VFX – ஹரிஹர சுதன், 
நிர்வாக தயாரிப்பு- J.கிரிநாதன், தயாரிப்பு மேற்பார்வை-AP.பால்பாண்டி, 
ஸ்டில்ஸ் – ஜி.ஆனந்த்குமார், 
விளம்பர வடிவமைப்பு – சிவகுமார்S, 
நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி,