full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கிறிஸ்துமஸ் நாளில் நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்பட டீசர் !

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “.
அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 25.12.2021 அன்று வெளியாகிறது.மிக சமீபத்தில் தான் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படம் ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது படத்தின் இறுதி பதிப்பு தயாரான நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு பணிகளில், படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. வரும் 2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தற்பொது படத்தின் டீசரை டிசம்பர் 25 அன்று படக்குழு வெளியிடுகிறது.

இப்படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்,Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார். முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்றுகிறார்.