full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஜல்லிக்கட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம்

இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக சி செல்வகுமார் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் “ஒரு கனவு போல”. அதைத் தொடர்ந்து இந்த பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக “வீரத்திருவிழா” என்கிற படத்தையும் வெளியிட இருக்கிறார்கள்.

சத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். மற்றும் பொன்வண்ணன், சிந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஹார்முக், இசை – இ எஸ் ராம், இவர் கோழி கூவுது, ஒரு கனவு போல போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். எடிட்டிங் – சதிஷ், தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய்முரளிதரன் (எ) வைரமணி, தயாரிப்பு – சி.செல்வகுமார்.

படம் பற்றி பேசிய இயக்குனர், “இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு வாழ் மக்கள் இருக்கும் இடத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அந்த காலத்தில் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு இல்லை. வீரத்தின் வெளிப்பாடு தான் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்காக ஐந்து இளைஞர்கள் ஈடுபட்டு ஜல்லிக்கட்டில் வென்று ஊருக்கு எப்படி நல்ல பெயரை எடுத்துத் தருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஊரின் பஞ்சாயத்துத் தலைவராக பொன்வண்ணன் நடித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தடை காரணமாக தாமதமாக வெளிவரும் இப்படமே தமிழில் ஜல்லிக்கட்டை வைத்து தயாரிக்கப்பட்ட முதல் படம்.

முழுக்க முழுக்க கிராமப்புற மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக வீரத்திருவிழா உருவாகி உள்ளது..

காரைக்குடி, அமராவதி புதூர், சிராவயல், ஆராவயல், நேமம் மற்றும் மேட்டூர் பெரியதண்டா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.” என்றார்.