full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரசிகர்களை வசீகரிக்கத் தயாராகும் வெண்பா

தமிழ்சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த, நன்கு நடிக்க கூடிய திறமையுடன் இருப்பவர்கள் அரிதினும் அரிது. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் உள்ளடக்கி மிக அருமையான தமிழ்ப்பெயருடன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள நாயகி தான் வெண்பா.

சமீபத்தில் வெளியான ‘காதல் கசக்குதையா’ படத்தில் முக்கால்வாசி நேரம் ஸ்கூல் யூனிபார்மிலேயே நடித்திருந்த வெண்பா, அந்த கதையின் நாயகியாக, கதைக்குள் இருக்கும் பிரச்சனையைப் படம் முழுதும் தனது அற்புதமான நடிப்பால் தூக்கி சுமந்திருக்கிறார். பள்ளிப்பருவத்திலேயே காதலிக்கத் துவங்குவது தவறு என்றாலும், இவர் பக்குவத்துடன் காதலை அணுகும் விதம் அழகோ அழகு.

அந்த வெண்பா தான் இப்போது மீண்டும் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து பள்ளி மாணவனுடன் காதல் செய்யத் தயாராகியிருக்கிறார். இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் வெண்பா தான் கதாநாயகி. நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களையும் கேரக்டர்களையும் தேர்ந்தெடுக்கும் வெண்பா தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம்.