பார்ட்டி முடித்து திரும்பிய வெங்கட்பிரபு டீம்

News

`சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `பார்ட்டி’.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் ஷ்யாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிஜி தீவுகளில் தொடர்ந்து 57 நாட்கள் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து `பார்ட்டி’ படக்குழு இந்தியா திரும்பியது.

படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.