full screen background image
Search
Friday 18 October 2024
  • :
  • :
Latest Update

வேட்டையன் – திரைவிமர்சனம்

வேட்டையன் – திரைவிமர்சனம்

 

வேட்டையன் ரஜினி அவர்களுக்கு மீண்டும் ஒரு மணி மகுடம்.

இந்த வேட்டையன் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேட்டையின் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை மற்றும் கதை இதுதான் படத்தின் மிகப்பெரிய பலம் சூப்பர் ஸ்டார் படமா என்று கேட்டால் இது ஒரு இயக்குனரின் படம் என்று தான் சொல்ல வேண்டும் அதற்காக சூப்பர் ஸ்டார் எங்கும் சோடை போகவில்லை.

ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்தப் படத்தையும் ஒரு சமூக கருத்தை மிக ஆழமாக அழுத்தமாக கூறி இருக்கிறார். போலீஸ் செய்யும் என்கவுண்டரால் ஏற்படும் சர்ச்சை மற்றும் நீட் கோச்சிங்கில் ஏற்படும் குளறுபடிகளை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குனர் ஞானவேல்

சரி படத்தில் நடித்தவர்களை பார்ப்போம் ரஜினிகாந்த், மஞ்சு பார்கவி, பகத் பாசில், ரித்திகா சிங் துஷாரா விஜயன், அபிராமி, ராணா மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் வேட்டையன் இந்த படத்தை லைக்கா ஃபிலிம்ஸ் சார்பாக சுபாஷ் கரன் தயாரித்திருக்கிறார்

கதைக்குள் போகலாம்

ரஜினிகாந்த் மிகப்பெரிய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இவரின் என்கவுண்டர் என்றால் அது நியாயமாக இருக்கும் என்பது போலீஸ் இலாகாவின் கருத்தாக இருக்கும். கன்னியாகுமரியில் தான் பணிபுரியும் பள்ளிக்கூடத்தில் போதை மருந்துகளை பதுக்கி வைத்திருக்கும் ஒரு கும்பலை துஷாரா விஜயன் போலீசில் காட்டிக் கொடுக்கிறார். உஷாரா தைரியத்தை பாராட்டுகிறார் ரஜினிகாந்த் இதனால் ரஜினிகாந்திடம் மிகவும் நல்ல பேர் வாங்கிய துஷாரா நான் சென்னைக்கு சென்று மேற்படிப்புக்காக போக வேண்டும் அதேபோல டீச்சர் ஆகவும் தொடர வேண்டும் என்ற ஆசையில் என்ற சென்னைக்கு வருகிறார்.
சென்னையில் நீட் கோச்சிங்கில் ஏமாற்று வேலைகளை கண்டறிகிறார். இதனால் ஒரு மர்ம கும்பல் துஷாராவை கொலை செய்து விடுகிறார்கள் துஷாரா ஆனால் அந்தப் பழியை ஒரு அப்பாவி மேல் விழுகிறது. அந்த அப்பாவியை தவறாக என்கவுண்டர் பண்ணுகிறார் ரஜினிகாந்த் அதை தவறு என்று சுட்டிக் காண்பிக்கிறார் அமிதாபச்சன் தான் செய்த தவறான என்கவுண்டர் ஒரு தாயும் ஒரு மகளும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு நியாயம் வேண்டும் என்று அந்த கேசை மீண்டும் கையில் எடுக்கிறார்.
அப்போதுதான் என் டி ஏ என்ற கோச்சிங் சர்வீஸ் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்ற உண்மை வெளிவர ஆரம்பிக்கிறது மிகப்பெரிய செல்வந்தரான இந்திய கோச்சிங் சென்டர் ரானா தான் உரிமையாளர். இவரின் பண பலமும் அரசியல் பலத்தினாலும் இவரிடம் யாரும் நெருங்க முடியவில்லை இவரால் பல குடும்பங்களும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கோச்சிங் சென்டரை ராணாவையும் எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் மீதி கதை

ரஜினிகாந்த் மாஸ் ஆக்சன் ஸ்டைல் இப்படி எல்லாத்தையும் இந்த வயதிலும் நம்மை மிரட்டுகிறார். என்று தான் சொல்ல வேண்டும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு இயக்குனரின் நடிகராக வலம் வந்திருப்பது மிகவும் பாராட்டக் கூடிய ஒரு விஷயமாக சொல்ல வேண்டும். வயசாக வயசாக உன் ஸ்டைலும் உன் தோற்றமும் மாறல அப்படின்னு சொல்ற மாதிரி தான் இந்த படத்துல வயசாக வயசாக இளைஞனாகவே மாறி அற்புதமான ஒரு நடிப்பையும் ஸ்டைலியும் இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார்.

படத்தின் மற்றும் ஒரு மிகப்பெரிய பலம் என்று சொன்னால் பகத் பாசில் ரஜினிகாந்த் அவர்களின் உதவியாளராக வரும் பகத் பாசில் வரும் அனைத்து காட்சிகளிலும் நம்மை ரசிக்க வைக்கிறார்.

ரஜினிகாந்த் அவர்களின் மனைவியாக மஞ்சு பார்கவி அவரும் ஒரு சிறந்த நடிகை என்று பல படங்களில் நமக்கு நிரூபித்து இருக்கிறார் குறிப்பாக தமிழ் படங்களில் அவருக்கு ஒரு நிறைவான கதாபாத்திரங்கள் கிடைத்து வருகின்றன அதேபோல் இந்த படத்திலும் ஒரு நிறைவான கதாபாத்திரத்தை அற்புதமாக செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

துஷாரா விஜயன் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் வருபவர் இவர் என்று சொல்லலாம் இவரின் நடிப்பை நாம் ஏற்கனவே ராயன் படத்தில் பார்த்து மிரண்டு இருக்கிறோம். இந்த படத்தில் ஒரு சிறிய சிறிய கதாபாத்திரம் என்றாலும் நம் மனதில் நிறைந்து நிற்கின்ற அளவில் தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் துஷாரா விஜயன்

அசிஸ்டன்ட் கமிஷனராக வரும் ரித்திகா சிங் மிகப்பெரிய கம் பேக் என்றே சொல்லலாம் தன் கதாபாத்திரத்தை மிக அற்புதமாக உணர்ந்து நடித்திருக்கிறார் அதேபோல அவர் தோற்றமும் அசிஸ்டன்ட் கமிஷனருக்கு மிக கனகச்சிதமாக இருக்கிறது.
படத்தில் நடித்த அனைவரும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ராணா ரஜினிகாந்த் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவுக்கான ஒரு வில்லனாக நடித்திருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய பலம் என்று சொன்னால் அனிருத்தின் பின்னணி இசை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் பின்னணி இசையில் மிகப்பெரிய பிரமிப்பை உண்டு பண்ணியிருக்கிறார் அனிருத் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனது நாம் அறிந்த விஷயம்.

இயக்குனர் டி.ஜே ஞானவேல் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை படத்தின் பணம் நிரூபித்து காட்டிக் கொண்டிருக்கிறார். வேட்டையின் மூலமும் மிக அற்புதமாக செய்து இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார் என்பதற்காக ஒரு மசாலா படம் எடுக்காமல் தனக்கென உள்ள பாணியை தவறவிடாமல் ஒரு சமூக கருத்தை மிக அற்புதமாக ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார் அதோடு ரஜினிகாந்த் படமாகவும் கொடுத்திருக்கிறார் மொத்தத்தில் திரையரங்கு சென்று படம் பார்ப்பவர்களுக்கு வேட்டையன்
ரசிகர்களுக்கு வேட்டை என்று தான் சொல்ல வேண்டும்