full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக காணொளி வெளியீடு

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக காணொளி வெளியீடு*

விக்டரி வெங்கடேஷ் – சைலேஷ் கொலனு -வெங்கட் போயனபள்ளி- நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் திரைப்படம் ‘ சைந்தவ்’. இத்திரைப்படத்தின் எட்டு முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்துகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75 ஆவது திரைப்படமாக ‘சைந்தவ்’ தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை HITverse திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் முக்கியமான உச்சகட்ட காட்சியில் எட்டு முதன்மையான நடிகர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் முழுமையான ஒத்துழைப்பில் உணர்வுபூர்வமான உச்சகட்ட காட்சியை படக்குழுவினர் படமாக்கினர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தில் நடித்திருக்கும் விக்டரி வெங்கடேஷ் உள்ளிட்ட எட்டு முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் பிரத்யேக காணொளி ஒன்றை படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். இதில் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா, ஜெயபிரகாஷ் ஆகிய படத்தின் முக்கிய நடிகர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் முழு கதையும் இந்த கதாபாத்திரங்களை சுற்றியே அமைக்கப்பட்டிருக்கிறது. திறமையான அனைத்து நடிகர்களையும் ஒன்றாக காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கேரி பி. ஹெச். படத் தொகுப்பாளராக பணியாற்ற, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், கிஷோர் தல்லூர் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

‘சைந்தவ்’ ஒரு பான் இந்திய திரைப்படமாகும். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதியன்று கிறிஸ்மஸ் விருந்தாக வெளியாகிறது. https://youtu.be/f-nAUgRWByk