full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஹீரோவாகிறாரா அன்பான இயக்குநர்??

“வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்” என்று சினிமாவிற்குள் தத்தளிக்கும் அத்தனை இளைஞர்களையும் பொறாமைப் பட வைத்திருப்பவர் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

சும்மாவா??, அடுத்தடுத்த ஹிட் படங்கள்.. அது மட்டுமல்லாமல் நயன்தாராவின் காதலர் என மனிதர் சொர்க்கத்தில் திளைக்கிறார். சமீபத்தில் கூட “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தின் வெற்றிக்கு பரிசாக நடிகர் சூர்யா, அவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.

சில விஷயங்கள் எவ்வளவு தான் உழைத்தாலும் அமையாது, அதையும் தாண்டி “மச்சம் வேண்டும்” என்று கிராமப் புரங்களில் சொல்வதைப் போல ஒன்று தேவை. அது யாருக்கு இருக்கிறதோ இல்லையோ, விக்னேஷ் சிவனுக்கு உடம்பெங்கும் இருக்கும் போல..

எதற்காக இவ்வளவு பில்டப் எனில், விக்னேஷ் சிவன் கூடிய விரைவில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்காக அவரது “அன்பான” நயன்தாராவே கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. உறுதி படுத்தப்படாத தகவலாக இருந்தாலும், இது நடந்தாலும் நடக்கலாம் என்றே கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். காரணமாக, “தானா சேர்ந்த கூட்டம்” படத்திற்குப் பிறகு அடுத்த படம் இயக்குவதற்கான முயற்சியில் விக்னேஷ் சிவன் காலம் தாழ்த்தி வருவதையே அவர்கள் கூறுகிறார்கள்.

இப்போது விக்னேஷ் சிவன் நடிக்க வந்தால் தான் என்ன?. ஆளும் நல்லா அமுல் பேபி மாதிரி தான் இருக்கிறார். நயன் தாராவின் மனதையே கவர்ந்தவர் வேறு, ரசிகர்களை கவர்ந்திழுப்பதா பெரிய காரியம்??

வாங்க, வாங்க அன்பான இயக்குநரே!!