full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

61-ம், 100-ம் ஒன்றா?

இயக்குநர் அட்லியின் கதை, திரைக்கதை இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் இளையதளபதி விஜயின் 61வது திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே.

சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு, முக்கிய நடிகர் நடிகையர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் முக்கியமான பல காட்சிகள் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன.

இப்படத்தின் FIRSTLOOK, இளையதளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜுன் மாதம் 22ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

இதன் ஆடியோ வெளியீட்டுவிழாவை ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர். ரகுமான் இசையில், கவிஞர் விவேக் பாடல்கள் எழுத ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், அனல்அரசு சண்டைப் பயிற்சியையும், விஜயேந்திரபிரசாத் மற்றும் ரமணகிரிவாசன் இருவரும் திரைக்கதையையும், ஷோபி நடனப் பயிற்சியையும் கவனிக்கின்றனர்.

அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளிவர, பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் சார்பில் முரளிராமசாமி தயாரிக்கிறார்.

விஜயுடன் எஸ்.ஜே.சூர்யா, காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேல், கோவைசரளா, சத்யன் ஆகியோருடன் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வரும் இப்படம், தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் தயாரிக்கும் 100வது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.