பற்றும் வதந்”தீ”.. பதறும் கோலிவுட்..

News

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி, வசூலில் தாறுமாறாக சாதனைகளை செய்து வரும் மெர்சல் படத்திற்கு அடுத்ததாக விஜய் நடிக்கப் போகும் “விஜய்62” படம் குறித்து பல தகவல்கள் அதற்குள் கசியத் தொடங்கிவிட்டன.

ஏற்கனவே, விஜய்62 படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என்ற அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வந்தபிறகும் சுற்றும் இதுபோன்ற செய்திகள் :-

வதந்தி நம்பர்1: ”ஸ்பைடர்” படம் சரியாக போகாத காரணத்தினால் ஏ.ஆர்.முருகதாஸை மாற்றி விடலாம் என்று விஜய் தரப்பும், தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

வதந்தி நம்பர்2: மெர்சல் படம் அபார வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் அட்லியுடனே கைகோர்க்கலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறாராம் விஜய். அதிலும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளாராம்.

வதந்தி நம்பர்3: மெர்சல் படத்தின் மூலம் சந்தித்த அரசியல் எதிர்ப்புகளுக்கு பதிலடி தரும் வகையில் முழுக்க முழுக்க ஒரு அரசியல் படத்தில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம் விஜய். அதற்காக அறிவிப்போடு கிடப்பில் போடப்பட்ட “பகலவன்” படத்தை எடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறாராம் விஜய். ”பகலவன்” திரைப்படத்தை எடுத்தால், விஜயை வைத்து மட்டுமே எடுப்பேன் என்று ”நாம் தமிழர்” ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமாகிய சீமான் நெடுநாளாய் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் 62 குறித்து அதிகாரப் பூர்வமான எந்த அறிவிப்பும் வராத நிலையில் நம்மவர்கள் சமூக வளைதலங்களில் பற்ற வைத்திருக்கும் இதுபோன்ற கற்பனைத் தீ எங்கெங்கு பரவப் போகிறதோ??

நீ பற்ற வைத்த நெருப்பொன்று………!