full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கோடியில் ஒருவன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் அசர வைக்கும் புதிய அவதாரம்! விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் என்ன?

விஜய் ஆண்டனி, நடிகை ஆத்மீகா நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். அரசியல் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இதுவரை இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் போன்ற அவதாரங்களை கடந்த விஜய் ஆண்டனி கோடியில் ஒருவனில் படத்தொகுப்பாளராக அசரவைக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். படத்தில் நடித்துக்கொண்டே எடிட்டிங் வேலையும் செய்வது மிகக்கடிமான ஒன்றாக இருப்பினும் விஜய் ஆண்டனி அதை பொருட்படுத்தாமல் ராத்திரி பகலென்ன பாராமல் கடினமாக வேலைசெய்துள்ளார்.

டைரக்டர் ஷாட் ஓகே என சொன்னதும் உடனே விஜய் ஆண்டனி ஸ்பாட் எடிட்டிங் வேளையில் உட்காந்துவிடுவாராம். பின்பு அடுத்த சீன்-னிற்கு ஷாட் ரெடி ஆனதும் நடிக்க வந்துவிடுவாராம். இப்படி கடினமாக தன்னுடைய வேலைகளை சிறப்பாக செய்துள்ளார் என மொத்த படக்குழு பாராட்டியுள்ளது. முதல் பாதியை பார்த்துவிட்டேன். இரண்டாம் பாதியை பார்க்க ஆவலாக இருக்கிறேன். விஜய் ஆண்டனியின் இந்த திறமை பிரமிக்க வைக்கிறது. இந்த எடிட்டிங் வேலைகளுக்கு அவருக்கு நாங்கள் சம்பளம் கூட தரவில்லை அவ்வளவு டெடிகேடட் ஆக தன் விடாமுயறச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் என தயாரிப்பாளர் தனன்ஜெயன் கூறியுள்ளார்.

படத்தில் டியூஷன் மாஸ்டராக வரும் விஜய் ஆண்டனி ஏழை மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை எப்படி ஒரு சாமானியனாக இருந்து எப்படி தட்டிக்கேட்கிறார் என்பதே படத்தின் சாரம்சம் என படக்குழு தெரிவித்துள்ளது.