full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விஜய் ஆண்டனியின் அடுத்த பரிமாணம்….

இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி !

ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்தவர்.விஜய் ஆண்டனி இத்துறையில் பல பரிணாமங்களில் அவரது திறமையை நிரூபித்த பிறகு, தற்போது கோலிவுட்டில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி தனது Vijay Antony Film Corporation நிறுவனம் மூலம், தயாரிக்கப்படும் “பிச்சைக்கரன் 2” திரைப்படத்தை இயக்குவது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர், நடிகர் விஜய் ஆண்டனி இது குறித்து பகிர்ந்து கொண்டதாவது…
ஒரு நீண்டகால கனவு இறுதியாக நனவாகிறது. இந்த புதிய அவதாரம் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நீண்ட காலமாக எனது மனதில் இயக்குநர் ஆகும் ஆசை இருந்தது. ஒரு நடிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும், நான் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன், பல்வேறு திரைப்பட இயக்குநர்களிடமிருந்து பல நுட்பங்களையும், திறன்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எந்தவொரு படைப்பாளிக்கும், தான் பணிபுரியும் துறை பற்றிய விழிப்புணர்வு இருப்பது நன்மை தரும் அம்சமாகும். இசையமைப்பாளராகவும் ஒரு நடிகராகவும் இத்துறையில் சிறந்ததொரு வெற்றியைப் பெற்றிருப்பது எனது அதிர்ஷ்டம். எனது திறமைகளை வளர்த்துக் கொள்ளும், இந்த திரைப்பயணத்தில், என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நான் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். எனது பிறந்தநாளின் இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், “பிச்சைக்கரன் 2” திரைப்படத்தில், இயக்குநராக எனது புதிய பயணம் துவங்குவதை, உங்களுக்கு தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ரசிகர்களுக்கு செண்டிமென்டும், பொழுதுபோக்கும், சரி விகிதத்தில் கலந்த சிறப்பானதொரு அனுபவத்தை “பிச்சைக்கரன் 2” திரைப்படம் தரும். இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.