full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்?

“தளபதி” விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், வளர்ந்து வரும் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் 62 படமாக உருவாகும் இப்படத்தை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

ஆரம்பமே “சர்கார்” திரைப்படத்தை சர்ச்சைகள் சுற்ற ஆரம்பித்திருக்கும் நிலையில், படம் வெளியானால் இன்னும் பல மடங்கு அதிர்வுகளை ஏற்படுத்தும் என பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் 63 வது படத்தை குரித்தும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

விஜய்யின் 63-வது படத்தை இயக்கப் போகும் பட்டியலில் பா.இரஞ்சித், வினோத், அட்லீ, பேரரசு ஆகியோரது பெயர்கள் தான் அடிக்கடி சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் எதுவுமே உறுதிப் படுத்தப்படாத தகவல்களாகவே இருந்து வந்தன. இந்த சூழலில், விஜய்யின் 63-வது படத்தை அட்லீ தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘தெறி’, ‘மெர்சல்’ என விஜய்க்கு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த அட்லீ, சொன்ன கதையை தான் விஜய் ஓகே சொல்லியிருக்கிறாராம்.

மேலும், இந்த படத்தை “ஏ.ஜி.எஸ் நிறுவனம்” அல்லது “சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்” என இந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்று தான் தயாரிக்கப் போகிறதாம்.