full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், படத்தை முடித்த சீனுராமசமி

 

 
விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த ‘”தயாரிப்பு எண் 2″ படம்  படப்பிடிப்பை முடித்திருக்கிறது. திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், எந்தவித சமரசமும் இன்றி படத்தை முடித்திருப்பது தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக் உட்பட ஒட்டுமொத்த குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
“இந்த செய்தியைப் கேட்கும் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். நான் கூட அதற்கு விதிவிலக்கல்ல. மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பை எப்படி முடிப்பார்கள் என்பதை பார்க்க காத்திருந்தேன். இருப்பினும், படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்றபோது தான் குழுவில் உள்ள ஒவ்வொருவரின் எனர்ஜி மற்றும் அர்ப்பணிப்பை நான் உணர முடிந்தது. ஒவ்வொருவரும் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இறுதியாக, நாங்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம், டப்பிங் பணிகளை விரைவில் ஆரம்பிப்போம்” என்றார் YSR ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக்.
 
மேலும் படக்குழுவை பற்றி அவர் கூறும்போது, “விஜய் சேதுபதி சார் மற்றும் சீனு ராமசாமி சார் ஆகியோரின் புரிதலும், ஒருவருக்கொருவர் என்ன தேவை என்பதை மிகச்சரியாக புரிந்து வைத்திருப்பதும் படத்தை மிக வேகமாக முடிக்க காரணமாக இருந்தது. விஜய் சேதுபதி சார் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞர்களும் சீனு ராமசாமி சார் என்ன எதிர்பார்ப்பார் என்பதை தெரிந்து வைத்துள்ளனர். பத்ம விபூஷன் இசைஞானி இளையராஜா மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் பாடல்கள் மற்றும் அருமையான பின்னணி இசையை கேட்க ஒரு ரசிகனாக காத்திருக்கிறேன். ஒளிப்பதிவாளர் சுகுமார் சார் ஒவ்வொரு இயக்குனருக்கும் வரம். அவர் சீனு ராமசாமி சாரின் திரைப்படங்களுக்கு மிகச்சிறப்பான காட்சிகளை தருவார். இந்த படமும் விதிவிலக்கல்ல என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்த “தயாரிப்பு எண் 2” படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இருவரும் ஏற்கனவே கிளாசிக்கான யதார்த்த சினிமாக்களை கொடுப்பவர்கள் என்பதால் YSR ஃபிலிம்ஸ் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் தயாரிக்கும் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியிருக்கிறது.
 
YSR Films படத்தை திட்டமிடுவதில் ஆரம்பித்தி குறிப்பிட்ட நேரத்தில் படத்தை முடித்து அதை ரிலீஸ் செய்வதில் பெயர் பெற்றது. அதன் முதல் தயாரிப்பான ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அது நிரூபணம் ஆகியிருக்கிறது. ரைஸா வில்சன் நடிப்பில் உருவாகும் அவர்களின் மூன்றாவது தயாரிப்பான  ‘ஆலிஸ்’ மிக விரைவில் தொடங்க இருக்கிறது.