விஜய் சேதுபதி விலகியதால் அமீர்

News

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கருணாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவிருக்கிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படத்தின் முதல் 45 நிமிடங்கள் ஜெயிலுக்குள்ளேயே நடக்கும். இதற்கான படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு பதிலாக இயக்குனரும், நடிகருமான அமீர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அமீர் ‘யோகி’ என்ற படத்தின்மூலம் நடிகராக அவதாரமெடுத்தார். அதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ‘வடசென்னை’ படத்தில் அவர் நடிக்கப்போவதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.