ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி

Speical

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.

தற்போது விஜய் சேதுபதியின் ட்விட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தொட்டிருக்கிறது. இதனால் தனது ரசிகர்கள் மற்றும் பின் தொடர்பவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் ‘ஒ’என்ற எழுத்துடன் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.