விஜய் சேதுபதி படத்தின் இசை வெளியீடு

News

சூப்பர் டீலக்ஸ், 96, சீதக்காதி, ஜுங்கா என அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வரும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுக குமார் இயக்கும் இந்த படத்தின் மூலம் நிகாரிகா கொனிதலா தமிழில் அறிமுகமாகிறார்.

ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிக்கும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை வாங்க வணிக ரீதியாக கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள இப்படத்தை ‘7c’s என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்’ தயாரிக்கிறது. ‘அம்மே நாராயணா என்டர்டெயின்மெண்ட்’ படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நவம்பரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தில் கோவிந்தராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்