சீனுராமசாமி இயக்கத்தில் உருவான ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வந்த விஜய்சேதுபதி அதே நேரத்தில் அருண்குமார் இயக்கி வந்த ‘சிந்துபாத்’ படத்திலும் நடித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ‘மாமனிதன்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ‘சிந்துபாத்’ படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தின் டப்பிங் பணியும் தொடங்கிவிட்டதாகவும் விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். எனவே இந்த இரண்டு படங்களும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என தெரிகிறது.
‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ள ‘சிந்துபாத்’ படத்தில் ‘இறைவி’ படத்திற்கு பின் மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ளார் அஞ்சலி. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
#Sindhubaadh dubbing started
An #SUArunkumar Film | A @thisisyr musical |
Produced @KProductionsInd & @VANSANMOVIES@yoursanjali @Rajarajan7215 @irfanmalik83 @mounamravi @Muzik247in@CtcMediaboy pic.twitter.com/1bUogXAFPy— VijaySethupathi (@VijaySethuOffl) January 20, 2019