இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்!

News
0
(0)
இந்தியாவின் எதிர்கால விண்வெளி  வீராங்கனையின்  கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்!
தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில்  அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் .
தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள  நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5%  /  ‘A ” கிரேடு) . 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘இஸ்ரோ” ” சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் .
தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி “Analog austronaut training centre” என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது.  பயிற்சிச் கட்டணம், தங்குமிடம் கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் ஆகிய வகையில், இப்பயிற்சிக்கு, எட்டு இலட்சம்(8,00,000) ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிறது.
 மாணவியின் பறிச்சிக்காக  தேவைப்படும் தொகையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றத்தின் சார்பாக அவரின் ரசிகர் மன்ற தலைமை செயலாளர் திரு .குமரன் மற்றும்
 தேனி நகர தலைவர் விக்னேஷ்  ஆகியோர் மூலம் வழங்கினர்
மேலும்  விஜய் சேதுபதி அவர்கள் படப்பிடிப்பில் இருப்பதால் தொலைபேசியின் மூலம் உதயகீர்த்திகாவிடம்  பேசி பாராட்டியுள்ளார் .

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.