full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விஜய் தேவரகொண்டா-வை வறுத்தெடுத்த சாவித்ரியின் ரசிகர்கள்!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகை சாவித்ரியின் பயோபிக் படம் தெலுங்கில் “மகாநதி” என்ற பெயரிலும், தமிழில் “நடிகையர் திலகம்” என்ற பெயரிலும் வெளியாகவிருக்கின்றன. இப்படத்தில் துல்கர் சல்மான், சமந்தா, ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். “அர்ஜுன் ரெட்டி” படத்தின் மூலம் புகழ்பெற்ற விஜய் தேவரகொண்டா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சாவித்ரி பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் படத்தில் நடித்திருக்கும் பலர் ட்வீட் செய்துவருகின்றனர். தற்போது சென்னையில் “நோட்டா” பட ஷுட்டிங்கில் இருக்கும் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டரில் “வாட் ஏ கூல் சிக்” எனப் பதிவிட, சாவித்ரியின் ரசிகர்களும், அபிமானிகளும் “இது சாவித்ரியைத் தரக் குறைவாகப் பேசியதற்குச் சமம்” எனக் கமென்ட் பாக்ஸில் தேவரகொண்டாவைத் துவைத்துத் தொங்கவிட்டு, “மன்னிப்பு கேட்கவேண்டும்” எனக் கோரியுள்ளனர்.

விஜய் தேவரகொண்டா இதற்குப் பதிலளிக்கும் வகையில் தேவரகொண்டா, “நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என எண்ணுபவர்கள் சென்னை லீலா பேலஸ் வரவும். உங்களுக்கு “மகாநதி” படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனுமதிச் சீட்டு தருகிறேன். “அவர் உயிரோடு இருந்திருந்தால்உங்களைப் போன்ற நியாயம் பேசுபவர்களை கண்டு சந்தோஷப்பட்டிருப்பார்” எனப் பதிலுக்கு ட்வீட் போட்டிருக்கிறார்.

ஆனாலும் நீண்டுகொண்டிருந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு இ-மெயில் முகவரியைக் கொடுத்து அதில், “நான் எனது சமூகவலைதளப் பக்கத்தில் என்ன எழுதவேண்டும் என்று முறைப்படுத்த நீங்கள் விரும்பினால், இந்த இ-மெயிலில் அப்ளை செய்யுங்கள்; அந்த வேலையை உங்களுக்குத் தருகிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.