விஜய் பிறந்த நாளுக்கு உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்

News

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். மேலும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் தனது 43வது பிறந்த நாளை ஜூன் 22ம் தேதி கொண்டாட இருக்கிறார். இதற்காக விஜய்யின் ரசிகர்கள் பலரும் விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் 43 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளார்கள். காஞ்சி கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 43 பேர் உடலுறுப்பு தானம் செய்யும் விழா நடைபெற்றது. இந்த விழா அகில இந்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் N.ஆனந்த் Ex MLA , R.ரவிராஜா, C.ராஜேந்திரன், A.C.குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மேலும் காஞ்சி கிழக்கு மாவட்ட பம்மல் நகர தலைமை சார்பில் மாவட்ட தலைவர் மின்னல் V.குமார், மாவட்ட செயலாளர் S. அறிவானந்தம், மாவட்ட பொருளாளர் பம்மல்V. பரத், மாவட்ட நிர்வாகிகள் A. K. ஹரிகரன், E. விஜய் தியாகு, N. ராஜேஷ்குமார், S.சுரேஷ் குமார் அவர்களின் தலைமையில் பம்மல் நகர தலைவர் M. பிரபா, நகர பொருளாளர் A.தீபக், நகர நிர்வாகிகள் V.கார்த்திக், E.சூர்யா, V.காமராஜ், S.ராஜ்கமல், S.விஜய், A.நவீன் அவர்களின் முன்னிலையில் 43 பேர் உடல்_உறுப்பு_தானம் செய்தனர் விழாவில் பல்லாவரம் நகர மக்கள் இயக்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பம்மல் நகர அமைப்பாளர் W. J. சத்யா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.