full screen background image
Search
Wednesday 4 December 2024
  • :
  • :
Latest Update

படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய்யின் பரிசு

இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய்யின் `மெர்சல்’.

அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது.

இந்நிலையில், தனது காட்சிகளை நடித்து முடித்த விஜய், நேற்று முன்தினம் படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால், `மெர்சல்’ படக்குழுவினருக்கு தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

தனது 100-வது படமாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

`மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகிறது.