ரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி!

News

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது “பேட்ட”. இப்படத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா என நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.