விக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி

News

விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. ஹரி இயக்கிய இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியை அரபு நாட்டு விமானி ஒருவர், டப்ஸ்மாஸ் செய்துள்ளார். இது விக்ரமை மிகவும் கவர்ந்திருக்கிறது. விமானி பேசும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் அரபு சாமி என்று பதிவு செய்திருக்கிறார்.

தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.