full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“விக்ரம் வேதா” தந்த வாய்ப்பு!

“தனதனனா.. தனதனனா” என தெறிக்கவிடும் விஜய் சேதுபதியின் தீம் மியூசிக்காகட்டும், “யாஞ்சி யாஞ்சி” என குழையவைக்கும் மாதவனின் ரொமான்ஸாகட்டும் “விக்ரம் வேதா” படத்தில் ரசிகர்களை அசரவைத்தவர் இளம் இசையமைப்பாளர் சாம் சி எஸ். விக்ரம் வேதா படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது வந்திருக்கும் செய்தி சாமின் இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது.

மெர்சல் வெற்றிக்குப் பிறகு இளைய தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் மூன்றாம் முறையாக இணையும் “தளபதி62” படத்திற்கு சாம் சி எஸ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்-முருகதாஸ் சேர்ந்தாலே மாஸ் ஹிட் என்றாலும், விக்ரம் வேதாவின் அசத்தல் பின்னணி இசை தந்த சாம் புதிதாய் இந்த கூட்டணியில் இணைந்திருப்பது நிஜமாகவே பக்கா மாஸ் தான்.