full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எதிர்பார்த்தது கிடைத்த மகிழ்ச்சியில் விக்ராந்த்

சுசீந்திரன் இயக்கத்தில், சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நெஞ்சில் துணிவிருந்தால்’.

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வருகிற நவம்பர் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் நடித்தது குறித்து பேசிய விக்ராந்த், “பாண்டிய நாடு படத்திற்கு பிறகு சுசீந்திரன் சார் இயக்கத்தில் எனக்கு மீண்டும் நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. சந்திப், சூரி, ஹரிஷ் உத்தமன் என மொத்த குழுவுடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த சந்தோஷம். இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாக கொண்ட படம். ‘பாண்டிய நாடு’ சினிமாவில் எனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. அதுபோல் அனைவருக்கும் இந்த படத்தில் அழுத்தமான உணர்ச்சிப் பூர்வமான கதாபாத்திரம் அமைந்துள்ளது.

சுசீந்திரன் மீண்டும் அவரது படத்தில் என்னை நடிக்க வைத்ததில் மகிழ்ச்சி. அவர் எனக்கு குரு. அவர் என்னை கௌரவ வேடத்தில் நடிக்கச் சொன்னாலும் நான் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருப்பதாகக் கூறி, இந்த படத்தில் என்னை கொஞ்சம் வித்தியாசமாக காட்ட முயற்சித்திருக்கிறார். ஒரு சாதுவாகவும், சிரித்த முகத்துடனும் காட்டியிருக்கிறார்.

இந்த படமும் அடுத்து வரும் `வெண்ணிலா கபடி குழு-2′ என இரண்டிலும் நகைச்சுவையான விஷயம் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறோம்.

சந்தீப் உடன் இந்த படத்தில் இருந்து தான் பழக்கம். நல்ல நட்பு ரீதியாக பழகினார். மெஹரின் நடிப்பில் தெலுங்கில் மூன்று படங்கள் இந்த ஆண்டு வெளிவந்து உள்ளது. அது சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்துள்ளது. அது போல் இந்த படமும் ஹிட் ஆக அமைந்து தமிழிலும் மிகப்பெரிய கதாநாயகியாக வர கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

சுசீந்திரன் சார் இந்த படத்தின் ஆரம்பத்திலேயே அடுத்து `வெண்ணிலா கபடி குழு-2′ பண்ணுவதாக கூறினார். முதல் பாகத்தில் விஷ்ணு இறந்து விடுவார். அவருக்கு பதில் இந்த படத்தில் என்னை நடிக்க வைப்பதாக கூறினார். படத்தை செல்வ சேகரன் இயக்குகிறார். வேகமாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2′ இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும்.

கவண், தொண்டன், கெத்து, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற மல்டி-ஹீரோ சப்ஜெட் படங்களில் நடித்து கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்க எதிர்பார்த்து இருந்த நேரத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. பாண்டிய நாடு படம் பார்த்துவிட்டு என்னை பாலா சார் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதே போன்று நடிப்புத் திறமையை தொடர வேண்டும் என்று ஊக்குவித்தார். அனைவரும் என்னைக் கவனிக்கிறார்கள் என்ற எண்ணமே என்னை மேலும் ஊக்குவிக்கிறது. இனி வரும் படங்களில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிப்பேன்.” என்றார்.