வசூல் மன்னனான வில்லன்

News

மோகன்லால் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் ‘வில்லன்’.

அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் மோகன் லால் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும், விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். மஞ்சு வாரியார், ஹன்சிகா, ஸ்ரீகாந்த் (தெலுங்கு நடிகர்), ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பாகுபலி -2 மற்றும் புலிமுருகன் திரைப்படத்துக்கு பின் மோகன் லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது. விஷாலுக்கு முதல் மலையாள திரைப்படமான இது, தற்போது மலையாளத்தில் மோகன்லால் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படமாகும். இத்திரைப்படம் இதற்கு முந்தைய மோகன்லால் படங்களின் சாதனையை முறியடித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

திரிஷ்யம் திரைப்படத்துக்கு பின்னர் மோகன்லாலின் நடிப்பை அனைவரும் ரசித்து பாராட்டிய திரைப்படம் இது தான் என்று கூறப்படுகிறது.
இப்படத்தை சல்மான் கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பஜிரங்கி பாய்ஜான்’ திரைப்படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.