புத்தாண்டில் புதிய மன்னராக விமல்!

News
0
(0)

களவாணியில் அறிமுகமாகி சரசரவென உச்சத்திற்கு சென்றவர் நடிகற் விமல்.. அடுத்தடுத்து பரபரப்பாக நடித்து வந்த விமலின் படங்கள் கடைசியாக சுமாரான வெற்றியையே அடைந்தது. அதனால் சற்று நிதானித்து கதைகளைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்து, ‘மன்னர் வகையறா’ என்கிற படத்தில் மட்டுமே தற்போது நடித்து முடித்திருக்கிறார்.

இந்தப்படத்தின் கதை மீதுள்ள அபார நம்பிக்கையில் விமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான A3V சினிமாஸ் சார்பாக தானே தயாரித்துள்ளர். முக்கியமாக இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ளார்.

 

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்..

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வரும் நவம்பர் 8ஆம் தேதி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள். அதை தொடர்ந்து வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இந்தப்படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

 

வரப்போகின்ற புது வருடத்தில் வெளியாகும் ‘மன்னர் வகையறா’ விமலின் திரையுலக பயணத்திற்கு புதிய பாதை போட்டுத்தரும் என நம்பிக்கையுடன் பேசுகின்றனர் படகுழுவினர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.