றெக்க விரிக்கும் விமல்.. வரிசை கட்டி நிற்கும் படங்களால் ஓய்வுக்கு டாட்டா!!

News
கடந்த ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் விமல். ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பப்பாங்கான கதைகளில் ஜொலிப்பதற்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார் நடிகர் விமல்..
 
‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர். நிதானமாக அவற்றை கேட்கும் விமல், அதில் தனக்கு செட்டாகும் கதைகளையும், அவற்றை இயக்கும் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்து கைகோர்க்க இருக்கிறார். 
 
அந்தவகையில் இந்த வருடத்தில் விமல் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கு மேல் களம் காண இருக்கின்றன. இயக்குனர் எழில் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார் .  சுராஜ் டைரக்சனில் போலீஸ் அதிகாரிகளாக விமல்-வடிவேலு நடிக்கும் படம் ஒன்று மருதமலை பாணியில் கலக்கலாக உருவாகவுள்ளது. 
 
இதுதவிர  ‘வெற்றிவேல்’ இயக்குனர் வசந்தமணி, ‘தமிழன்’ பட இயக்குனர் மஜித், ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் விமல்.  ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்  . ஆக, இந்த வருடம் விமலின் கால்ஷீட் டைரி இப்போதே நிரம்பிவிட்டது.
 
இன்னொரு பக்கம் ஏற்கனவே விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னிராசி’ படம் இறுதிக்கட்ட பணிகளில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.. மேலும் சற்குணம் டைரக்சனில் ’களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு நடித்துவந்தார் விமல். கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ’களவாணி-2’, படத்தின் படப்பிடிப்பு வரும் மே-3ஆம் தேதி முதல் மீண்டும் முழுவீச்சில் துவங்குகிறது. 
 
இந்த வேலை நிறுத்தம் சமயத்தில் கிடைத்த இந்த 3௦ நாட்கள் தான் விமலுக்கு கிடைத்த ஒய்வு நாட்கள்.. ஆம்.. இனி வரும் நாட்களில் ஓய்வில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகிவிட்டார் விமல்.