full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மலேசியாவில் முதல்முறையாக விஐபிக்கு 550

வருகிற ஆகஸ்ட் 11-ல் ரேசில் இதுவரை `தரமணி’, `பொதுவாக எம்மனசு தங்கம்’, `தப்பு தண்டா’, `மாயவன்’, `குரங்கு பொம்மை’, `நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜோதிகாவின் `மகளிர் மட்டும்’, சிபிராஜின் `சத்யா’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று செய்திகள் வந்தாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

இந்த ஆகஸ்ட் 11 ரேசில் இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படமும் இணைந்திருக்கிறது. தமிழகத்தில் அதிக திரையரங்குகளை விஐபி 2 கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மலேசியாவிலும் `வேலையில்லா பட்டதாரி-2′ படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்திருக்கிறது.

மலேசியாவில் மட்டும் 108 திரையரங்குகளில் 550 திரைகளில் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மலேசியாவில் வேறு எந்த நடிகரின் படத்துக்கும் இவ்வளவு திரைகள் கிடைத்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மலேசியாவிலும் தனுஷ் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.