வெற்றிகளில் வென்ற விராட் கோலி

General News
0
(0)

ஒரே ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். அவரது தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் 31 வெற்றிகளை பெற்றது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 30 வெற்றிகளை பெற்று இருந்தது.

விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் 20 ஓவர் தொடரில் ஆடவில்லை. இதனால் அவரது வெற்றி எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் உயராது.

ஜெயசூர்யா 2001-ம் ஆண்டில் இலங்கை அணிக்கு 29 வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். பாண்டிங் 2003 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு 29 வெற்றிகளையும், தென்னாப்பிரிக்க கேப்டன் சுமித் 2007-ம் ஆண்டு 29 வெற்றியையும் பெற்றனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.