full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பெண் பார்த்து பார்த்து சோர்ந்து விட்டார்கள் : விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஷால் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் விஷால் அளித்த பேட்டியில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. வீட்டில் பெண் பார்த்து வருகிறார்கள். இது தொடர்பாக விஷால் வார பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எனது திருமணத்துக்கு வீட்டில் பெண் பார்த்து வருகிறார்கள். பெண் பார்த்து பார்த்து அவர்களே சோர்ந்து போய்விட்டார்கள். ஏதாவது ஒரு திருமண வரவேற்புக்கு என்னை கூப்பிடுகிறார்கள் என்றால் எனக்கு பார்த்துள்ள பெண் அங்கு வந்திருக்கிறாள் என்று அர்த்தம். அதனை நான் புரிந்து கொள்வேன்.

ஆனால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கிற வரையில் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று நானே சொல்லி விட்டேன். இது பைத்தியக்காரத்தனமாக கூட இருக்கலாம். இதனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

விஷாலுக்கு 40 வயது ஆகுதுன்னு கூட சொல்றாங்க. அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை.” என்று கூறியுள்ளார்.