full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

ட்ரைடென்ட் ரவி தயாரிப்பில் விஷால் – சுந்தர் .சி இணையும் முழு நீள “ஆக்ஷ்ன்“ படம் !

காமடி ,குடும்ப படம் ,திரில்,பேய் படம் ,ஆக்ஷ்ன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர் .சி . இவரது இயக்கத்தில் மீண்டும் “ஆக்ஷ்ன்” படம் .இது  இந்திய வரலாற்றில்  இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷ்ன் படமாக உருவாக்கி வருகிறது .இதற்கு “ஆக்ஷ்ன்” ( ACTION )  என்றே பெயர் சூட்டியுள்ளார்கள் .

ஏற்கனவே ஆக்ஷனில்  பரபரப்பாக இருக்கும் விஷால் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் .இவர் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார் .ஒரு உண்மையை கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார் .அங்கே ஆக்ஷ்ன் ,சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அமைத்துள்ளார்கள் .சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள் ..இதில் பல காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கும் .இதற்காக பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ட்ரைடென்ட் ரவி . மிக பிரம்மாண்ட படைப்பான  இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி TURKEY நாட்டில் அசார்பைசான் AZARBAIZAN ,கேப்படோசியா CAPPADOCIA , பாகு BAKU , இஸ்தான்புல் ISTANBUL ,தாய்லாந்து நாட்டில் கிராபி தீவு KRABI ISLAND ,  பேங்காக் போன்ற இடன்களில் 50 நாள்களும் மேலும் இந்தியாவில் 50 நாள்கள் ஜெய்ப்பூர் ,ரிஷிகேஷ் ,டேராடூன் ,ஹைதராபாத் ,சென்னை ,போன்ற இடங்களிலும் பரபரப்பாக படமாக்கப்பட்டது .      விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார் .மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான  ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் இதன் மூலம் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு ,ராம்கி ,சாயாசிங்,ஷாரா, பழ .கருப்பைய்யா , பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது .போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது .கதை இயக்கம்சுந்தர்.சி .
திரைக்கதை: சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி.
இசை: ஹிப் ஹாப் தமிழா.
ஒளிப்பதிவு: டியூட்லீ DUDLEE
எடிட்டிங்: ஸ்ரீகாந்த்.
வசனம்: பத்ரி.
கலை: துரைராஜ்.
ஸ்டண்ட்: அன்பறிவ்.
நடனம் ;  பிருந்தா, தினேஷ்.
பாடல்கள்: பா. விஜய் , ஹிப் ஹாப் தமிழா.
தயாரிப்பு மேற்பார்வை: P. பால கோபி
தயாரிப்பு : டிரெயிடன்ட் ஆர்ட்ஸ் TRIDENT ARTS
தயாரிப்பாளர்: R. ரவீந்திரன்  R.RAVINDRAN