full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விஷாலுக்கு வந்த மிரட்டல் மெசேஜ்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் மணிமாறன், முகமது சாகில் ஆகியோர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், “தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் வெளியாகி உள்ளது. விஷாலின் கை, கால்களை வெட்டுவோம் என்று கொலை வெறியுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியிட்டவர்களையும், தகவல் வெளியிட தூண்டியவர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.