full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

துப்பறிந்துவிட்டேன் – நெருங்கிவிட்டேன் – 2 வாரங்களில் சொல்லி விடுவேன் : விஷால் அதிரடி

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. இதில் விஷாலுடன் பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மிஷ்கின் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் விஷால் பேசும்போது, ‘பாண்டிய நாடு’ படம் ஒரு சிறந்த தயாரிப்பாளராக எனக்கு பெயர் பெற்று கொடுத்தது. அதைவிட சிறந்த பெயரை ‘துப்பறிவாளன்’ எனக்கு பெற்று தரும். 8 வருஷமா நானும் மிஷ்கினும் படம் பண்ண வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருந்தோம். ஆனால், சில காரணங்களால் நடக்கவில்லை. தற்போதுதான் அது நடந்திருக்கிறது. 2 சைக்கோவும் சேர்ந்து எப்படி பண்ண போகிறார்கள் என்று நிறைய பேர் பேசிக்கொண்டார்கள். துப்பறிவாளன் படத்தில் சண்டைக் காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தில் என்னை அழகாக காண்பித்திருக்கிறார்கள் என்றால், அது ஒளிப்பதிவாளரைத்தான் பாராட்ட வேண்டும். நான் பார்த்த வியந்த நடிகை சிம்ரன். அவருடன் இப்படத்தில் நடித்தது மறக்க முடியாத நாள். அதற்கு மிஷ்கினுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

இணைய தளத்தில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் என்பவரை துப்பறிந்து விட்டேன். அவன் யார் என்று எனக்கு தெரியும். இன்னும் 2 வாரங்களில் மக்கள் மத்தியில் சொல்லிவிடுவேன்.

என்னை காமராஜ் என்று அழைக்கிறார்கள். ஆனால், அவரை மாதிரி நேர்மையாக இருப்பேன். அவரைப்போல் கல்யாணம் பண்ணாமல் இருக்க முடியாது. லட்சுமிகரமானவர் என்னிடம் சண்டைக்கு வருவார்’ என்றார்.

மிஷ்கின் பேசும்போது, ‘நான் இதுவரை 9 படம் இயக்கியுள்ளேன். ஆனால், இப்படம் முதல் படம் போல் உணர்கிறேன். இந்த 9 படங்களில் என்னிடம் சிறந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்த நடிகர் என்றால் அது விஷால் தான். என் தம்பி போன்றவன். என் அம்மா வயத்தில் பிறந்தவன் போல் உணர்கிறேன். இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார்.