full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மின்மினியாக விஷ்ணு விஷால், அமலாபால்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `மாவீரன் கிட்டு’. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது விஷ்ணு, `கதாநாயகன்’, `சின்ட்ரல்லா’, `பொன் ஒன்று கண்டேன்’, `சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், `முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் விரைவில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு `மின்மினி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.