விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் 

General News News
0
(0)

விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் 

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

ஜூலை-17 விஷ்ணு விஷால் அவர்களின் பிறந்த நாளாகும்! அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது ரசிகர்கள், ‘இரத்த தானம், அன்னதானம்’ போன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து அசத்தியுள்ளனர்.

தமிழகம் மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மனநலம் குன்றியோருக்கான ‘ஜாவல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு’ உணவும் வழங்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ‘அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள ‘தாய்மை அன்புக் கரங்கள்’ குழந்தைகள் இல்லத்திற்கு ‘அன்னதானம்’ வழங்கியுள்ளனர்

தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள ‘நேதாஜி இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். மேலும் சென்னையில் அமைந்துள்ள ‘அன்னை அன்பாலயா’ இல்லத்திற்கும் உணவு வழங்கியுள்ளனர்.

இவ்வாறு விஷ்ணு விஷால் பிறந்த நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனை அறிந்த விஷ்ணு விஷால் தனது ரசிகர்களை நேரில் அழைத்து வாழ்த்தி தனது அன்பை பகிர்ந்துகொண்டார்.!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.