full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அப்பாவின் பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்.!

 

 

 

 

 

 

 

நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘நீர்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’,  ‘ஜீவா’,  ‘இன்று நேற்று நாளை’, ‘ராட்ச்சசன்’ ஆகிய படங்களில் நடித்ததற்காக விஷ்ணு பிரபலமான நடிகராக வலம் வருகிறார். கடைசியாக அவர் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் நடித்திருந்தார்.

 

 

 

 

 

 

பூட்டுதல் நாட்களில், விஷ்ணு சமூக ஊடக பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். தனது வொர்க்அவுட் வீடியோ, த்ரோபேக் புகைப்படங்கள், வரவுள்ள திரைப்பட அப்டேட்கள் என பலவற்றை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் அவர், தனது அப்பாவின் பிறந்தநாளை இன்று கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். அப்போது அவரது தாயும் அவர்களுடன் இருக்கிறார்.

 

 

 

 

 

 

அந்த புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட அவர், “என் முதல் அன்பு, எனது முதல் ஹீரோ, எனது முதல் நண்பர், எனது முதல் ஆசிரியர், இனிய பிறந்தநாள் அப்பா” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, விஷ்ணு தனது தாய், தந்தை மற்றும் அக்காவுடன் தான் குழந்தயாக இருக்கும் புகைப்படத்தையும், தனது சிறு வயதில் காவல்துறை அதிகாரியான தனது அப்பாவின் துப்பாக்கியுடன், போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.