full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அஜித் ஜோடி இவரா? அவரா?

அஜித்-சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் “விஸ்வாசம்”. படம் குறித்த அறிவிப்பு வந்ததோடு சரி, இன்று வரையில் அடுத்தகட்ட தகவல் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகி, பிறகு விலகிக் கொண்டார்.

இது தவிர படம் குறித்த அப்டேட் எதுவுமே இல்லாமலேயே இருந்து வருகிறது.

இருந்தாலும் சமூக வலைதளங்களில் எதையாவது கொளுத்திப் போடுவதையே சிலர் வழக்கமாக செய்து வருகிறார்கள். கதாநாயகி இவரா? அவரா? என இவர்களுக்கு தெரிந்த நடிகைகளின்
பெயர்களாக எல்லாம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பரப்பி வருகிறார்கள்.

கொஞ்சம் காத்திருந்தால் அவர்களே சொல்லி விடப் போகிறார்கள், அதற்குள் அவசரமாய் பொய்யாக ஏன் இப்படி புரூடா கிளப்ப வேண்டும்.