full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விஸ்வாசம் படப்பிடிப்பு எப்போது?

அஜித் – சிவா கூட்டணிக்கு “விஸ்வாசம்” நான்காவது படம். விவேகம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததை அடுத்து சத்யஜோதி ஃப்லிம்ஸ் நிறுவனத்திற்கே மீண்டும் நடிப்பது என்ற அஜித்தின் முடிவால் தான் இந்தக் கூட்டணி மீண்டும் அமைந்தது.

படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி வெகுநாட்களாகியும் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவே இல்லை. டிசம்பரில் தொடங்கும் என சொல்லப்பட்ட விஸ்வாசத்தின் படப்பிடிப்பு மூன்று மாத காலமாகியும் தொடங்கவே இல்லை.

வடசென்னை பின்னணியில் உருவாகும் படமென்பதால் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

கதாநாயகியாக நயன்தாரா, காமெடிக்கு யோகி பாபு, தம்பி ராமையா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோரும் ஒப்பந்தந்தம் செய்யப்பட்டிருக்கிரார்கள். இசையமைப்பாளராக டி.இமான் அஜித்துடன் இணைந்திருக்கிறார்.

இவ்வளவும் தயாரான பின்னும், படம் தொடங்காததற்குக் காரணம் டைரக்டர் சிவா தான் என சொல்லப்படுகிறது. முழுமையாக கதையே இன்னும் தயார் செய்யப்படவில்லையாம் அவர் தரப்பிலிருந்து. முழு கதை தயாராகாமல் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என அஜித் கண்டிப்புடன் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

“விஸ்வாசம்” படமும் “விவேகம்” போல் அமைந்து விடக் கூடாது என்பதில் அஜித் மிகக் கவனமுடன் இருப்பதால் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என சொல்லப்படுகிறது.