தன் கொடுவிலார்பட்டி கிராமத்து மக்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு முதல் ஆளாக சண்டைக்கு செல்பவர் அஜித்(தூக்கு துரை). இவரை கண்டாலே வில்லன்கள் அனைவரும் நடுநடுங்கி தான் இருப்பார்கள்.
டாக்டராக வரும் நயன்தாரா பயிற்சி வகுப்பிற்காக கொடுவிலார் பட்டிக்கு வருகிறார். நயன்தாராவின் துணிச்சல், அழகைக் கண்டு அவர் மீது காதல் வயப்படுகிறார் அஜித்.
அஜித்தின் நல்ல குணத்தை பார்த்து நயன்தாராவும் அவர் மீது காதல் கொள்கிறார். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு பெண்குழந்தையும் பிறக்கிறது. ஒரு சில காரணங்களால், அஜித்தை விட்டு தனது குழந்தையுடன் மும்பையில் செட்டில் ஆகிறார். பத்து வருடங்கள் தனது மனைவி நயன்தாராவையும் மகள் அனிகாவையும் பிரிந்து தனது கிராமத்தில் இருக்கிறார் அஜித்.
சொந்த பந்தங்கள் கேட்டதற்கு இணங்க, தனது மனைவியையும் மகளையும் பார்க்க மும்பை செல்கிறார் அஜித். அங்கு அஜித்தின் மகள் அனிகாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துவதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.
யார் அந்த கும்பல்…?? எதற்காக அனிகாவை துரத்துகிறார்கள்..?? நயன்தாரா மீண்டும் தஜித்தோடு இணைந்தாரா..?? என்பதே படத்தின் மீதிக் கதை…..
முழுக் கதையையும் தோள் மீது தாங்கி கொண்டு செல்கிறார் அஜித்.. தன்னுடைய ரசிகர்களுக்கு தரமான சிறப்பான பொங்கல் விருந்தை படைத்திருக்கிறார் அஜித். ஆக்ஷன் , காதல், செண்டிமெண்ட், எமோஷன், பாசம், காமெடி என அனைத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார் அஜித்.
அழகால் அனைவரையும் கட்டிப் போடுகிறார் நயன்தாரா. சாதாரண ஹீரோயினாக வந்து செல்லாமல், தனக்கான கதாபாத்திரத்திற்கு வலு ஏற்றி நடித்திருக்கிறார் நயன்தாரா.
விவேக், ரோபோ ஷங்கர், தம்பி ராமையாவின் காமெடி காட்சிகள் ஆங்காங்கே மட்டுமே சிரிக்க வைக்கின்றன.
ஜெகபதி பாபுவின் வில்லனிசம் பெர்பெக்ட்..
அஜித்திற்கும் அனிகாவிற்குமான தந்தை – மகள் காட்சிகள் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க வைத்துவிடுகிறது.
இயக்குனர் சிவா கிராமம், காதல், செண்டிமெண்ட் என இதிலே பயணிக்கலாம்.. வீரம் தொடர்ந்து விஸ்வாசத்தையும் விருந்தாக கொடுத்திருக்கிறார்.
இமானின் இசையில் பாடல்கள் ரகம்… பின்னனி இசை ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டல்..
வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவு கலர் புல். அதிலும், மழையில் நடக்கும் ஆக்ஷன் காட்சி அதகளம்…
விஸ்வாசம் – ரசிகர்களுக்கான பொங்கல் விருந்து…