full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2!

 

“வேலைக்காரன்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், சிவ கார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் மூன்றாம்
கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

சிவா இந்தப் படத்தில் வருத்தப் படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் பொன்ராம் உடன்
தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். முதல் முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார். இன்னும்
பெயரிடப்படாத இந்த படத்தில் சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோரும் நடிக்கின்றனர். பொன்ராமின் ஆஸ்தான
இசையமைப்பாளர் D.இமான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

சத்தமே இல்லாமல் 55 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கும் நிலையில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.
வேகமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அடுத்த ஆண்டு 17.02.2018 அன்று வெளியிடப்
போவதாக அறிவித்துள்ளார்கள்.

படத்திற்கு பெயரே வைக்காமல் பாதி படத்தை முடிக்குமளவிற்கு படக்குழுவினர் வேகம் காட்டி வருவது, இந்தப் படத்தின் மீது
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.