சில தினங்களுக்கு முன் சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம் உலகையே நடுநடுங்க வைத்தது.
போலீஸாரால் நடைபெற்ற இந்த விசாரணைக் கொலையை மக்கள் போராட்டத்தின் மூலம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த கொலையை பற்றி பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சாமானிய மக்கள் மீது இனி கை வைத்தால் நாங்கள் கேட்போம் என்று மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது?
சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.’ என்று கூறியுள்ளார்.